Saturday, September 28, 2013

என்னை விட்டு போகாதே...!

பகுதி 11

இரண்டு நாட்கள் உருண்டோடியது அவனுக்கு யுகங்களை கடந்த உணர்வை தந்தது. அவளை காணும் நொடிக்காக அவனது உள்ளம் ஏங்கி இருந்தது. இதற்கு முன் அவள் பலமுறை அவளது ஊருக்கு சென்று இருக்கிறாள். இந்த முறை ஏனோ அவள் தன்னை விட்டு வெகு தூரம் சென்றதை போல் உணர்ந்தான் அவன். அவனது இதயம் கணத்தது.

இதோ அவளுக்காக காத்திருக்கிறான் மனதில் ஒரு குழந்தையை போல் அழுதபடி. பூங்காவின் கதவுகள் திறக்கின்ற ஒலி கேட்கும் போது எல்லாம் அவனது விழிகள் அந்த திசையை நோக்கி திரும்புகின்றன ஏக்கத்துடன்.
சில முறை திரும்பி பார்த்த அவனது கண்கள் அவள் இல்லை என்ற ஏமாற்றத்தால் சோர்ந்து விட்டிருந்தன. அவனது மனம் இனியும் ஒரு முறை ஏமாற விரும்பவில்லை. இப்போது கதவு திறக்கும் ஒலி அவனது செவிகளில் விழுந்திடவில்லை.

இருள் சூழ தொடங்கியது. என்னவோ தன் வாழ்விலும் இருள் சூழ்வது போல் பதறியது அவனது இதயம். கைப்பேசியை எடுத்தான் அவளை தொடர்புகொள்ள. அவனது உள்ளம் அவனை தடுத்தது. ஒரு வித பிடிவாதம் அவனை ஆக்கிரமித்து விட்டிருந்தது.

இனியும் காத்திருப்பதில் பயனில்லை என்று சொன்னது அவன் மனம். மெல்ல எழுந்தான். அவன் அந்த இடத்தை விட்டு விலக எத்தனிக்கையில் அந்த நிகழ்வு நடந்தேறியது.

அந்த ஒலி அவனது செவிகளை  வந்து அடைந்தது. எத்தனை நாளாய் இவனை பித்து பிடித்தது போல் அலைய வைத்த ஒலி அது. அவளின் காலோடு இருக்கும் பாக்கியம் பெற்ற கொலுசின் ஒலி தான் அது. அவளை நோக்கி அவனது மனம் பயணிக்க இந்த ஒலியும் ஒரு காரணம். அவனை நோக்கி வந்தன ஆண் ஒலிக்கு சொந்தமான உருவம்.

அருகில் நெருங்கிய அந்த ஒலியின் திசையில் இருந்து கேட்டது “கண்ணன்” என்று அவனை அழைக்கும் குரல். ஆம் , அவன் பல வருடங்களுக்கு முன் கேட்ட அதே குரல் தான் அது. குரல் வந்த திசையை நோக்கி திரும்பினான். அவனது விழிகள் அதிர்ச்சியிலும் ஏதோ இனம் புரியா இன்பதிலும் உறைந்து போனது. அங்கு நின்று கொண்டிருந்தது அவன் தன் உயிருக்கும் மேலாய் நேசித்த தேவி .

0 comments:

Post a Comment