Sunday, September 8, 2013

நீ எனக்காகவே

உன் விழிகளில் கண்ணீர் வழிந்திடும் போது
அதை துடைப்பது என் கைகளாய் இருக்க வேண்டும்
உன் இதழோரம் புன்னகை பூக்க
நானே காரணமாய் இருந்திட வேண்டும்
உன் பேச்சுக்கள் ஒவ்வொன்றும்
என் செவிக்கே சொந்தமாய் இருக்க வேண்டும்
உன் பார்வை என்றென்றும்
என் மீது மட்டுமே விழுந்திட வேண்டும்
இது பேராசை ஆக தெரியலாம் பெண்ணே
இருந்தும் வேண்டுகிறேன் இதனை எல்லாம்
உன் மீது கொண்ட அதீத காதலால்...!!!

0 comments:

Post a Comment