Saturday, August 31, 2013

என்னை விட்டு போகாதே...!

பகுதி 8:

அன்று இரவுமுழுவதும் உறக்கம்வரவில்லை அவளுக்கு. இதை பற்றிபேச உனக்குஉரிமை இல்லைஎன்றானே. என்மீது அவன்கொண்டுள்ள அன்புஅவ்வளவு தானா? அவன் இங்குஇருந்து செல்லமறுப்பதற்கு என்னகாரணம்? அவள்மனம் பலவாறுயோசித்தது.

சற்று இடைவெளிக்குபின் அவளதுமனம் வேறுவழியில் யோசிக்கதொடங்கியது. அதுஅவளுக்கு பெரும்வலியை தந்தது. அவன் இங்கிருந்துசென்று விட்டால்அவனது அன்பைநான் இழக்கநேருமோ? அவனைபோல என்னைஎவரால் நேசிக்கமுடியும்?

அவளது மனதுசொன்னது. கைபேசிஉள்ளதே. பேசலாமேஎன்று. வெறும்கைபேசி அழைப்புகழும்குருஞ்செய்தி பரிமாற்றங்களும்எங்களது அன்பைவெளிப்படுத்தி விடுமா? என் சோகங்களைபகிர்ந்து கொள்ளதலை சாய்த்துநான் அழுதிடஅவனது தோள்கள்கிடைக்குமா? அவன்இங்கு இல்லாமல்போனால் நான்என்ன செய்வதுஎன்றெல்லாம் கேள்விகள்எழுப்பியது அவள்மனம். அவளதுமனம் இங்குபலவாறு சிந்திக்கஅங்கே அவனும்ஒருவித குழப்பத்தில்ஆழ்ந்திருந்தான்.

நீ யாரையாவதுகாதலிக்கிறாயா?” என்றாலே. ஏன் அப்படிஒரு கேள்வியைகேட்டாள் அவள்.நான் இங்கே சிறைப்பட்டிருக்கும்காரணத்தை கேட்கிறாளே. அவளே காரணமாய் இருந்துகொண்டு. இந்தநான்கு வருடத்தில்அவளது நட்பு  மட்டுமே என்கடந்த காலத்தைநான் மறந்துபுன்னகைக்க, சுவாசிக்கஉதவியது.அதைஇழந்துவிட்டு நான்வெகு தூரம்செல்வது சாத்தியமா?

நான் காயப்பட்டிருக்கும்போதெல்லாம் கைக்குட்டைபோல என்கண்ணீர் துடைத்தவள்அவள் தானே. அவளின்றி வாழ்வதுசாத்தியமா?வாழவிருக்கும்நாட்கள் வரை அவளுடன் இருக்க விரும்பும் என்மனம் எப்படிஎன்னை இந்தஇடத்தை விட்டுசெல்ல அனுமதிக்கும்.


இத்தனை நினைவுகள்அவனை பாதித்தபோதும் அவனைஅதிகம் பாதித்ததுஒற்றை நினைவுதான். எப்படிசொன்னேன் அவளிடம்உனக்கு உரிமைஇல்லை என்று. அவளை தவிரஎவருக்கு உள்ளதுஎன்னிடம் கேள்விகேட்கும் உரிமை.

அவனது இந்த வார்த்தைகள்அவளை விடஅவனை தான்அதிகம் பாதித்துஇருந்தது. கைபேசியை எடுத்தான். அவளை அழைத்தான். அவள் ஏற்கவில்லை. கோவத்தில் இருப்பாளோஎன்று எண்ணினான். மறுநாள் அவளைகாணும் நொடிக்காககாத்திருந்தான்.

0 comments:

Post a Comment