பகுதி7
அவர் பேசதொடங்கினார்.
“அவனுக்கு இங்கு டெல்லியில்நல்ல வேலைபார்த்து வைத்திருக்கிறேன். நாங்கள் அனைவரும்இங்கு இருக்கையில்அவன் அங்குதனியாய் இருப்பதுஎங்களுக்கு வருத்தமாய்உள்ளது. ஆனால்அவன் அதைபுரிந்து கொள்ளமாட்டேன் என்கிறான். என்ன காரணம்என்று புரியவில்லை. நீ சொன்னால்தான் அவன்கேட்பான் அல்லவா? நீ தான்அவனுக்கு புரியவைக்க வேண்டும். உன்னை தான்நம்பி இருக்கிறேன்”என்றார்.
“ஆனால் நான் எப்படி?” என்றவளின் பேச்சைநிறுத்திவிட்டு, “ நல்ல பதிலுக்காக காத்திருக்கிறோம். உன்னால் முடியும்“ என்று சொல்லிஅழைப்பை துண்டித்தார்.
அவர் அழைப்பைதூண்டிக்கவும் அவன்அவளை நோக்கிவரவும் சரியாய்இருந்தது.
அவள் அருகில்வந்து அமர்ந்தான். “ உனக்கு பிடித்தமாங்காய்”என்று அவளிடம்நீட்டினான் புன்னகையுடன்.
புன்னகைக்க முடியாதபோதும் பெயருக்காகபுன்னகைத்தாள் அவள்.
உனது மாமாஅழைத்தார்கள். நீஇல்லாததால் நான்அழைப்பை ஏற்றுபேசினேன் என்றாள்.
நடந்தவற்றை புரிந்துகொண்டவனாய் “ சரி, அதை பற்றிபேச வேண்டாம்என்றான்”
“பேசாமல் எப்படி இருப்பது? இது உன்வாழ்க்கையை பற்றியதுஅல்லவா? நீ டெல்லிக்கு செல்ல தான் வேண்டும்”என்றாள் அவள். அவளது குரல்சற்று உடைந்துபோயிருந்தது.
“என்னால் செல்ல முடியாது. இதை விட்டுவிடு”என்றான் அவன்.
காரணமில்லாமல் எவரும்இப்படி ஒருமுடிவை எடுக்கபோவதில்லை. அந்தகாரணத்தை அறியஅவள் மனம்ஏங்கியது.
“என்ன காரணம் உனதுஇந்த முடிவிற்கு? இங்கேயே இருந்துவிடும்அளவுக்கு என்னஉள்ளது உனக்கு? யாரையேனும் காதலிக்கிறாயா?” என்றாள்.
அவனது முகத்தில்கோபம் எட்டி பார்த்தது. “ காதலா? … உன்னிடம்…. இல்லை இதைபற்றி எதுவும்கேட்காதே. இந்தநிமிடம் உனக்குஇதை பற்றிகேட்கும் உரிமைஇல்லை”என்றான்.
இந்த வார்த்தைகள்அவள் கேட்டகேள்வியின் பிரதிபலிப்புஎன்பதை அவள்உணரவில்லை. கலங்கிபோனாள். தலையைதாழ்த்தி கொண்டாள்தன் விழிகளில்வழியும் கண்ணீரைஅவனிடம் காட்டவிரும்பாமல்.
அவன் அந்தஇடத்தில் இருந்துவிலகி செல்லும்காலடி சப்தம்அவளுக்கு கேட்டது.



0 comments:
Post a Comment