Monday, July 8, 2013

என்னை விட்டு போகாதே...!

பகுதி 2:

கண்ணனுக்காக காத்துக்கொண்டிருந்தாள் அவள்.
காத்துக்கொண்டு இருப்பதில் உள்ள சுகம் அவள் அறிவாள்.
காரணம், அவனுக்காக அவள் காத்திருப்பது இது முதல் முறை அல்ல.
எப்பொழுதும் தாமதமாய் வருவது அவன் பழக்கம்.
அவனுக்காக அன்புடன் காத்திருப்பது அவள் வழக்கம்.
அவளது நினைவுகள் சற்று பின்னோக்கி பயணித்தன.
என்று அவன் அவளுக்கு முதன்முறை அறிமுகம் ஆனான் என்பதை சிந்தித்து பார்த்தாள்.
புன்னகைத்தாள்.
ஆம்,அவர்களின் முதல் அறிமுகம் வேடிக்கையான ஒன்று தான்.
அன்று அவள் கல்லூரிக்கு செல்வதற்காக வழக்கம் போல் காத்திருந்தாள்.
கல்லோரி பேருந்து வந்து நின்றது.
அதில் ஏறிய போது அவள் வழக்கமாய் அமரும் இடத்தில் ஒரு ஆண் அமர்ந்திருப்பதை கண்டாள்.
பார்த்து பழக்கம் இல்லாத முகம்.
முதல் முறை அவளது பேருந்தில்.
அதுவும் அவள் இடத்தில்.
சற்றே தயங்கி அவனை அழைத்தாள்.
இருமினாள் என்றே சொல்ல வேண்டும்.
அவன் அவள் பக்கம் திரும்பினான்.
அவனை கண்டதும் அவள் அறிந்திருக்க வழி இல்லை அவன் அவளது வாழ்வில் எத்தனை முக்கியமானவாய் மாற போகிறான் என்பதை.
இது வழக்கமாய் நான் அமரும் இடம் என்றாள்.
"ஓ! என்னை மன்னித்து விடுங்கள்.
நான் வழக்கமாய் வேறு பேருந்தில் செல்பவன். இன்று தான் முதல்முறை இந்த பேருந்தில் வருகிறேன்.
தெரியாமல் அமர்ந்து விட்டேன்.
நீங்கள் அமர்ந்து கொள்ளுங்கள்"
என்று சொல்லி இருக்கையில் இருந்து எழுந்து விலகி சென்றான்.
"கண்ணா! என்னருகில் வந்து அமர்ந்து கொள்" என்று யாரோ சொன்னது அவள் செவிகளில் விழுந்தது.
அவன் அங்கு சென்று அமர்ந்தான்.
ஏனோ அவள் அறியாமலே அவளது விழிகள் அவன் பக்கம் அடிக்கடி திரும்பியது.


0 comments:

Post a Comment