Tuesday, July 9, 2013

என்னை விட்டு போகாதே...!

பகுதி 3:

இப்படி இனிமையாய் தொடங்கிய அவர்களின் சந்திப்பு,
நாளடைவில் சற்றே வளர்ந்தது பேருந்து பயணத்தில் மட்டும்.
ஒரு நாள் அவன் பேருந்தில் வரவில்லை.
எதையோ இழந்தது போன்று உணர்ந்தாள் அவள்.
வருத்தம் கொள்வதர்க்கு என்ன உள்ளது இதில்?
அவன் வெறும் பேருந்து தோழன் தானே...
அவளது மூளை சொன்ன இந்த சமாதானத்தை ஏற்கவில்லை அவள் மனம்.
கல்லூரியில் அவனை தேடியது அவளது விழிகள்.
அவன் பயிலும் வகுப்பை கூட அவள் அறிந்திருக்கவில்லை.
எத்தனை கண்மூடித்தனமான உறவு இது என நினைத்து கொண்டாள்.
கல்லூரி முழுக்க தேடியும் காண முடியவில்லை அவனை.
வருத்தத்தோடு மாலை விடுதி  திரும்ப பேருந்தில் சென்று அமர்ந்தாள் அவள்.
அவனுடன் பயிலும் ராகுல் அவள் பார்வையில் விழுந்தான்.
சற்றே தயங்கியபடி அவனிடம் கேட்டாள் கண்ணன் வரவில்லையா என?
அவனுக்கு உடல் நலமில்லை அதனால் தான் வரவில்லை என்றான் அவன்.
ஏதோ ஒரு வலி தோன்றியது அவளின் உள்.
விடுதி சென்று சேர்ந்ததும் பலவாறு தன் நினைவுகளை திசை திருப்பினாள்.
ஆனால், மீண்டும் மீண்டும் அது கண்ணனை சென்று அடைந்தது.
அவளது தோழிகளிடம் அவனது கைபேசி எண் உள்ளது.
அவள் இது வரை அவனிடம் அதை பெறாதது வேடிக்கை தான்.
காரணம் அவள் ஆண்களிடம் அதிகம் பேசுவதை, அவளது கைபேசி என்னை தருவதை விரும்பியதில்லை.
இன்று அவளது மனம் அதை பற்றி எல்லாம் சிந்திக்கும் நிலையில் இல்லை.
அவனது எண்ணை பெற்றாள்.
அவளது விரல்களில் சிறு நடுக்கம் அவள் எண்களை அழுத்திய போது.
அலைப்பேசி மணி ஒலித்தது.

0 comments:

Post a Comment