பெண்ணே...!!
என்னை கொல்ல நீயும் நினைத்து விட்டால்
ஆயுதம் கொண்டு என்னை சிதைத்து விடு....
வேண்டி கேட்கிறேன் உன்னை
மௌனம் என்னும் ஆயுதம் வேண்டாம்
உயிரோடு என்னை எரித்தது போலே
நினைவோடு என்னை புதைத்தது போலே
உணர்கிறேன் உந்தன் மௌனத்தினாலே...
என் தலையணை அறியும் என் கண்ணீரை
நான் உறங்காமல் கழித்த என் இரவுகளை
உனக்காக துடிக்கும் இதயம் ஒன்று
உன் மௌனத்தால் துடிக்குது வலியினில் இன்று....
எத்தனை தொலைவு நீ சென்றாலும்
உன் வார்த்தைகள் நம்மை சேர்த்து வைக்கும்
அருகில் இருந்தும் நீ மௌனம் கொண்டால்
என் உயிரை அதுவே பிரித்து வைக்கும்
அதுவே உந்தன் விருப்பம் என்றால்
பேசாமல் மௌனம் தொடர்ந்துவிடு
என் உயிரை நீயும் பெரிதென நினைத்தால்
இதை படித்ததும் கண்ணீர் சிந்திவிடு.......
என்னோடு ஒரு வார்த்தை பேசி விடு.....!!!
என்னை கொல்ல நீயும் நினைத்து விட்டால்
ஆயுதம் கொண்டு என்னை சிதைத்து விடு....
வேண்டி கேட்கிறேன் உன்னை
மௌனம் என்னும் ஆயுதம் வேண்டாம்
உயிரோடு என்னை எரித்தது போலே
நினைவோடு என்னை புதைத்தது போலே
உணர்கிறேன் உந்தன் மௌனத்தினாலே...
என் தலையணை அறியும் என் கண்ணீரை
நான் உறங்காமல் கழித்த என் இரவுகளை
உனக்காக துடிக்கும் இதயம் ஒன்று
உன் மௌனத்தால் துடிக்குது வலியினில் இன்று....
எத்தனை தொலைவு நீ சென்றாலும்
உன் வார்த்தைகள் நம்மை சேர்த்து வைக்கும்
அருகில் இருந்தும் நீ மௌனம் கொண்டால்
என் உயிரை அதுவே பிரித்து வைக்கும்
அதுவே உந்தன் விருப்பம் என்றால்
பேசாமல் மௌனம் தொடர்ந்துவிடு
என் உயிரை நீயும் பெரிதென நினைத்தால்
இதை படித்ததும் கண்ணீர் சிந்திவிடு.......
என்னோடு ஒரு வார்த்தை பேசி விடு.....!!!



0 comments:
Post a Comment