Saturday, July 6, 2013

தேசத்து நாயனே.....!

துப்பாக்கி ஏந்தி எல்லையில் நிற்கும் வீரனே..!
உன் உறவுகள் இங்கே ஏங்கி இருக்க
நீ உறவாய் நினைத்தது எதனை?
பிறந்த மண்ணை தாயென நினைத்தாய்
தேசத்து மக்களை காதலித்தாய்
போர் வாழ்க்கையை மனமுடித்தாய்
வெற்றிகள் பலவற்றை ஈன்றெடுத்தாய்
ஆபத்து காலத்தில் மக்கள் துயர் துடைத்தாய்
நாட்டிற்காக உன் உயிர் கொடுத்தாய்
இறந்தும் கொடியை தரைதொட விடாமல்
தாங்கி இருந்திட மார்பு கொடுத்தாய்....!!!
திரையில் எத்தனை நாயகன் வந்தாலும்
உண்மையில் நீயே
இந்த தேசத்து நாயகனே....!!!

0 comments:

Post a Comment