Thursday, July 18, 2013

முதன்முறை

என் விழிகளை நான் முதன்முறை திறக்கையில்
இருள் என்னை சூழ்ந்திருந்தது
என் கை விரல்களை நான் முதன்முறை அசைக்கையில்
எல்லைகள் என்னை தடுத்தது
தனிமையில் நான் இருப்பதாய் நினைக்கையில்
ஒரு குரல் என்னிடம் பேசுவது எனக்கு கேட்டது
என் உடலில் வளர்ச்சியை நான் அடைந்திட்ட போது
என்னுள் பதற்றமும் தோன்றியது
நான் இருந்த கருவரையை விட்டு பிரிகிறேன்
எப்படி இருக்குமோ வெளியில் என்று
சற்றும் சிந்திக்கவில்லை நான்
வெளியில் என்னை வரவேற்க
அந்த இறைவனே வந்திடுவான் என
என் தாயவள் உருவத்தில்….!!!

0 comments:

Post a Comment