பகுதி6:
தன் மீது அவன் கொண்டுள்ளஅன்பை அவள் அறியாமல் இல்லை.
அவனை போல தன்னை நேசிக்கும்ஒருவன் இருக்க வழியில்லை என்றேஅவளது மனம் சொன்னது.
இந்த உறவு நட்பு எனும்பெயரில் இருந்தாலும் அது அந்த எல்லையைகடந்து எங்கோ பயணித்து விட்டதைஅவள் அறிவாள்.
அவர்களின்கல்லூரி விடுமுறை நாட்களில் அதிகம் ஏங்கியது அவர்கள்அமர்ந்து பேசும் அந்த பூங்காமேடை தான்.
இன்று அந்த மேடையும், பூங்காவில்பூத்து குலுங்கும் மலர்களும் இந்த நட்பின் அழகைரசித்து கொண்டிருக்கின்றன அமைதியாக.
சில மணி நேர உரையாடலுக்குபின், சாப்பிட ஏதேனும் பெற்றுவருவதாக சொல்லி எழுந்து சென்றான்அவன்.
செல்கையில்அவனது கைப்பேசியை அவள் அருகில் வைத்துவிட்டு சென்றிருந்தான்.
அவன் சென்ற சில மணிதுளிகளில் அவனது கைபேசி ஒலித்தது.
அவள் யார் அழைப்பததென்று பார்த்தாள்.
அவனது மாமாவின் பெயரை காட்டியது அது.
அவள் அவரை நன்கு அறிவாள்.
அவரும்தான். அவரது குடும்பம் டெல்லியில்குடியிருக்கின்றனர்.
வேறு வழி இன்றி அவள்அந்த அழைப்பை எற்றாள்.
மறுமுனையில்அவனது மாமா தான் பேசினார். அவள் தான் கவியரசி பேசுவதாகவும்அவன் வேளையாய் வெளியே சென்றிருப்பதாகவும் சொன்னாள்.
அவர் “நான் உன்னிடம் தான்பேச வேண்டும்” என்றார்.
புரியாமல்விழித்தவள், “என்னிடமா? சரி சொல்லுங்கள்" என்றாள்



0 comments:
Post a Comment