பகுதி 5:
அவன் அவளை கண்டதும் புன்னகைத்தான்.
அவளும் தான்.
அவள் அருகில் வந்து அமர்ந்தான்.
"அதிக நேரம் காத்திருக்கிறாயா?" என்றான்.
"இது வழக்கம் தானே. என்று நீ சீக்கிரமாக வந்திருக்கிறாய்?" என்றாள்.
"என் மீது கோபமா? கோபம் என்றால் என்னை திட்டி விடு" என்றான்.
"உன் மீது என்று நான் கோபப்பட்டு இருக்கிறேன். தெரியாதா உனக்கு. உனக்காக காத்திருப்பதும் ஒரு சுகம் தானே" என்றாள்.
புன்னகைத்தான் அவன்.
"சரி இன்று என்ன விசேஷம். அரசி, பெயருக்கு ஏற்றார் போல் அழகாக புடவை அணிந்திருக்கிறாய்?" என்று கேட்டான்.
கல்லூரி முடிந்து இரண்டு வருடங்கள் சென்ற போதும் அவர்களது நட்பு வலுவாய் தொடர்வதில் பிறருக்கு மட்டும் அல்ல அவனுக்கும் அவ்வப்போது ஆச்சரியம் தோன்றும்.
ஆனாலும் மகிழ்ச்சி மட்டுமே நிலைத்திருக்கும்.
"ஆமாம் ஆமாம் விசேஷம் தான்" என்றாள்.
"என்ன என்ன?" என்றான் மிகுந்த ஆர்வத்துடன்.
"இன்று மாலை என்னை பெண் பார்க்க வருகின்றனர்" என்றாள்.
"அப்படியா?.... சந்தோசம்" என்றான் குரலில் சிறு மகிழ்ச்சியுடன்.
"என்ன அப்படியா? இதற்குள் திருமணம் செய்து என்ன செய்ய போகிறேன். நீ என்ன விசேஷம் என்று கேட்டதற்காக கிண்டல் செய்தேன்" என்றாள்.
நினைவை திரும்ப பெற்றவன் போல மகிழ்ச்சியுடன் "அப்பாடா... நான் கூட பயந்து விட்டேன். சிறு கோபமும் வந்தது" என்றான்.
"பயந்து விட்டாயா? அது சரி கோபம் எதற்கு?" என்றாள்.
"பின்ன என்ன? இத்தனை நாளாய் பழகுகிறோம். உன்னை பெண் பார்க்க வருவதை இத்தனை தாமதமாய் சொல்லுவாயா என்னிடம். முன்பே சொல்லி இருந்தால் எவ்வளவு மகிழ்ந்திருப்பேன்.. உனக்கு நான் முக்கியம் அல்ல போலும் என்று தான் கோபம் வந்தது" என்றான்.
"பைத்தியமா உனக்கு? உன்னை அன்றி யாரும் அவ்வளவு முக்கியம் அல்ல எனக்கு. சரி எதற்கு பயந்தாய்?" என்றாள்.
"இத்தனை விரைவாக உன் அன்பை இழக்க போகிறேனோ? என் மீது நீ காட்டும் அன்பில் பங்கு பெற ஒருவர் வர போகிறாரோ? என்று எண்ணி பயந்தேன்" என்றான்.
அவளால் புன்னகைக்காமல் இருக்க முடியவில்லை.

0 comments:
Post a Comment