Thursday, July 11, 2013

தமிழே!

தமிழே!
நீ பெற்றெடுத்த பிள்ளைகளில் தான் எத்தனை வேற்றுமை
உன் மூத்த பிள்ளைகள்
உனக்காக சங்கம் வளர்த்து உனக்கு புகழ் சேர்த்தனர்
உன் அடுத்த பிள்ளைகளோ
அரசணையில் ஏற மட்டுமே உன்னை பயன்படுத்தினர்
இன்று உன் கடைசி பிள்ளைகளோ
உன்னை மறந்துவிட்டு
ஆங்கிலத்தை நாடுகின்றனர்
வெளிநாடு சென்றுவிட...!!!
ஆனால்,
நீ மட்டும் அன்று முதல் இன்று வரை
அதே அழகுடன் இருக்கிறாய் செம்மையாக...!!!

0 comments:

Post a Comment