பகுதி 4:
சில நேர மணி ஓசைக்கு பின் ஒரு குரல் கேட்டது "ஹலோ யாரு பேசுறது?" என்று.
அது அவனது குரல் தான்.
பழகிய குரல் என்ற போதும் அவளிடம் ஒரு தயக்கம்.
தயக்கம் கலைந்து பேச தொடங்கினாள்.
"நான் கவியரசி பேசுகிறேன்" என்றாள்.
சில நொடிகள் மௌனமாய் கழிந்தன.
யார் என்று தெரியாமல் சிந்திக்கிறானோ? என்று எண்ணினாள்.
"பேருந்தில் உங்களுடன் பயணிக்கும் கவியரசி" என்றாள்.
அவன் புன்னகைக்கும் ஓசை தெளிவாய் கேட்டது.
"உங்கள் குரல் கூட மறந்துவிடுமா என்ன? நீங்களா என்னை அழைத்தது என்ற அதிர்ச்சியில் சற்று மௌனமானேன்" என்றான்.
"உங்களுக்கு உடல் நலம் இல்லை என்று உங்கள் நண்பர் சொன்னார். எப்படி இருக்கிறது என்று தெரிந்து கொள்ள தான் அழைத்தேன்" என்றாள்.
"பெரிதாய் ஒன்றும் இல்லை. சாதாரண காய்ச்சல் தான். நாளை கல்லூரிக்கு வந்து விடுவேன்" என்றான்.
"மருத்துவரிடம் சென்றீர்களா?" என்றாள்.
"சொன்னேன் அல்லவா சாதாரண காய்ச்சல் தான். குணமாகிவிடும். சரி ஏன் இவ்வளவு மரியாதை? கண்ணன் என்றே அழைக்கலாமே" என்றான்.
"பழக்கம் இல்லை பெயர் சொல்லி அழைத்து" என்றாள் தயங்கியபடி.
"என்னை பெயர் சொல்லி அழைக்கலாம். நான் உங்கள் நண்பன் தானே?" என்றான்.
சரி கண்ணன். நீயும் தான் என்று சொல்லி புன்னகைத்தாள்.
ஹா ஹா சரி அரசி என்றான் அவன்.
எவரும் அவளை அரசி என்று அழைத்தது இல்லை.
கவி என்று அழைப்பது உண்டு.
ஆச்சரியம் கலந்த மகிழ்ச்சி அவளிடம்.
அதை அவனிடம் சொன்னாள்.
"நானும் பிறர் போல அழைத்தால் அவர்களுக்கும் எனக்கும் வித்தியாசம் என்ன?" என்றான்.
ஆம் நீ என் வாழ்வில் வந்தவர்களில் தனியானவன் தான் என்றது அவள் மனம்.
"சரி நாளை சந்திப்போம் அரசி. உனது கைபேசி எண் என்னிடம் இருக்கலாம் தானே?" என்றான்.
சிந்தனை கலைத்தவள் "கண்டிப்பாக கண்ணா" என்றாள்.
"நீ என் பெயர் சொல்லி அழைப்பது நன்றாக உள்ளது. நாளை சந்திப்போம்" என்று சொல்லி அழைப்பை துண்டித்தான்.
இன்று அவனுக்காக காத்திருக்கையில் அவளது சிந்தனையில் இந்த காட்சிகள் ஓடி மறைந்தது.
அவன் அவளை நோக்கி வருவது அவள் கண்களுக்கு தெரிந்தது.

0 comments:
Post a Comment