"சரி கண்ணா. உன் காதல் வெற்றி பெற என் வாழ்த்துக்கள்" என்று சொல்லிவிட்டு விலகி சென்றவளை பார்த்தவண்ணம் இருந்தான் அவன். அவளை காயப்படுத்திய உணர்வு இருந்தும், மனதில் ஒரு வித நிம்மதியோடு அவனும் கவியும் வழக்கமாய் அமரும் அந்த மேடையின் மீது சென்று அமர்ந்தான்.
"நாளை இதே மேடையில் நானும் கவியும் அமர்ந்திருப்போம். மரங்களே, நீங்கள் கவலை பட வேண்டாம். இனியும் அவளிடம் நான் என் காதலை மறைக்க போவதில்லை. நாளை உங்கள் முன்பு அவளிடம் நான் என் காதலை சொல்ல போகிறேன்" பித்து பிடித்தவன் போல் மரங்களிடம் உரையாடினான் அவன்.
அவனும் அவளும் திருமண மேடையில் அமர போகும் நாளை எண்ணி பார்த்தவன் இதழ்களில் தோன்றியது புன்னகை. அவன் தன்னை மறந்து அவளது நினைவில் ஆழ்ந்துவிட்டிருந்தான்.
அதே நேரம் விடுதியில் கவிக்கும் மலருக்குமான உரையாடல் தொடர்ந்த வண்ணம் இருந்தது. "என்ன முடிவு செய்திருக்கிறாய் கவி?" அக்கறையோடு கேட்டாள் மலர்.
"என்ன முடிவு எடுப்பது. என் மனதை எவரோ ஓங்கி அறைந்தது போன்று உணர்கிறேன். யாரும் இல்லாது தனிமையில் விடப்பட்ட மழலை போல இருக்கிறேன். என் மனதோடு இருக்கும் வலியின் அளவை என்னால் சொல்லிட முடியாது. உனக்கு அது புரியும் என்றே நினைக்கிறேன்" என்றவளின் கண்ணீர் மட்டும் வற்றவில்லை.
வலிகளை தாங்கும் உள்ளத்தின் ஒற்றை ஆறுதல் விழிகள் வடிக்கும் கண்ணீர் மட்டுமே. அவளும் அதையே தான் நாடி இருந்தாள் ஆறுதலுக்காக.
"இப்படியே சொல்லி கொண்டிருக்க முடியுமா? நீயாக எந்த முடிவையும் எடுக்காதே. அவனிடம் ஒரு முறை பேசி பார். அவன் மனதிலும் உன் மீது காதல் இருக்கலாம் அல்லவா?" என்ற மலரின் வார்த்தைகள் அவளிடம் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை.
"பேசுவதில் என்ன பயன்? அவனை நான் நன்கு அறிவேன்" உறுதியாய் சொன்னாள் அவள். பாவம் அவனது மனதை சரியாய் படிக்க முடியாத அவளது இயலாமையை அவளது மனம் அறியவில்லை.
"எனக்காக ஒரு முறை பேசி பார்" என்று மலர் சொல்லி கொண்டிருக்க கவியரசியின் கைபேசி சிணுங்கியது. அழைத்தது அவளது தந்தை. அழைப்பை ஏற்றவள் சில மணி துளிகளுக்கு மௌனமாய் தலை அசைத்தபடி அவளது தந்தை கூறியதை கேட்டு கொண்டிருந்தாள்.
பின் சரி என்று கூறிவிட்டு அழைப்பை துண்டித்தவள் மலரின் கேள்விக்கு பதில் சொல்பவளாய் "நாளை எங்களது சந்திப்பில் இது அத்தனைக்கும் ஒரு முடிவு பிறந்து விடும்" என்றாள்.

0 comments:
Post a Comment